சிரியாவின் தலைநகரில் உள்ள வழிபாட்டுத்தலம் ஒன்றில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஷியா பிரிவினருக்கான இந்த வழிபாட்டு தலத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வழிபாடு நடத்த வருகை தருகின்றனர்.
இந்த வழிபாட்டுத்தலம் அருகே நேற்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காரில் நிரப்பப்பட்ட குண்டுகள் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என சிரியா உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்