யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகராஜா அலெக்ஸ் (வயது 26) என்பவர் பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டு பொலிஸ் காவலில் இருந்த வேளை உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நேற்று வெள்ளிக்கிழமை நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளைஞரின் சிறுநீரகம் தாக்குதலின் காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த இளைஞன் நவம்பர் 08 ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் கைது செய்யப்பட்ட நான்கு நாட்களாகியும் அவர் விளக்கமறியலில் வைக்கப்படவில்லை அதேவேளை விடுவிக்கப்படவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.