கம்பஹா வைத்தியாசாலையில், குறைமாத பிரசவ அறையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில், உயிரிழந்த 22 நாட்களே ஆன சிசு தாங்கள் பெற்றெடுத்த பிள்ளை இல்லை என குறித்த சிசுவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குறித்த சிசுவின் சடலம் தொடர்பாக விசாரணை கம்பஹா பதில் நீதவான் மஹேஷ் ஹேரத் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்துள்ள சிசு தாம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் வைத்து பெற்றெடுத்த சிசு அல்ல என அந்த சிசுவின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த சிசுவின் சடலத்தை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மையான பெற்றோரை கண்டறியுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.