மொரந்துடுவ பகுதியில் உள்ள வீதியோர உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சாலையோர உணவகம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்துகிறார்கள்
அதன்பின் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் வீதியோர உணவகம் முன்னால் நின்றிருந்த பெண் ஒருவரின் அருகில் சென்று அவரை தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் ஏறுகின்றார்
அந்நிலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்த போதும் அது ஸ்டார்ட் ஆகவில்லை.
அவ்வேளை வீதியோர உணவகம் முன்னால் நின்ற ஒருவர் ஓடி வந்து சங்கிலியை பறித்தவரை பிடிக்கிறார்
எனினும், சந்தேக நபர்கள் இருவரும் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.