சிங்கத்துடன் புகைப்படம் எடுக்க சென்ற 20 வயது இளைஞர் சிங்கம் தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு சென்று புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே சிங்கத்தால் தாக்கப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.