அநுராதபுரம் பகுதியில் தனது தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைபெற வந்த 29 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் நடை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.