-மஸ்கெலியா நிருபர்-
நுவரெலியா மாவட்டத்தில் சாமிமலை நகரத்தில் 5 நாட்களுக்கு மேலாக நகரசபையால் குப்பைகள் சேகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் காரணமாக குப்பைகளின் துர்நாற்றம் நகரம் முழுவதும் வீசுவதோடு, சீரற்ற காலநிலை காரணமாக அப்பகுதியில் நோய் பரவும் அபாயமும் காணப்படுகின்றது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு, நகரை சுத்தப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.