குருநாகல் பிரதேசம் தெரணமக் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தெரணமக் பகுதியில் உள்ள விகாரைக்கு நன்கொடையாளர் ஒருவர் வழங்கிய பெறுமதியான சலவை இயந்திரத்தை விற்ற விகாராதிபதி அந்த பணத்தில் போதைப்பொருள் உட்கொண்டுள்ளதுடன் கைவசம் போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.
வேவகெதர பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் தற்போது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.