-யாழ் நிருபர்-
வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ் தானத்தின் தை மாத சர்வ ஏகாதசி உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
வசந்த மண்டபத்தில் அருள்பாலித்து விளங்கும் வேங்கட வரதராஜப் பெருமாள், சீதேவி, பூமாதேவி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தீபராதனைகள் கட்டப்பட்டு சர்வ ஏகாதசி உற்சவம் இடம்பெற்றது.
இவ் உற்சவத்தினை செ.ரமணீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.
இதில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் கலந்துகொண்டு அருட்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.



