இந்தியாவின் – தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கிக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த இருவர் கலந்துகொண்டனர்.
மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் கில்மிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இவர்களில் கில்மிஷா இறுதிப் போட்டிக்கு தெரிவாயிருந்ததுடன், அஷானி இறுதித் தருணத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார்.
இந்தநிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இதில் வெற்றி பெற்று சரிகமப இசை நிகழ்ச்சியில் கில்மிஷா முதலிடம் பிடித்தார்.