சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட பாடநெறி மாணவர்களுக்கிடையேயான மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் ஓட்டோ மொபைல் லெவல் 04 இரண்டாம் ஆண்டு மாணவர்களின் அணி சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.
அரையிறுதிப் போட்டியில் Staff அணிக்கு எதிராக 03 ஓட்டங்களினால் வெற்றிபெற்ற இவ் அணி இறுதிப் போட்டியில் Automobile Level 04, 1st year மாணவ அணியுடன் வெற்றிபெற்று 50th Anniversary Champion கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.


