சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகளினால் நேற்று புதன் கிழமை உணவு நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, உணவுச் சட்டத்தை மீறிய இரண்டு பேக்கரிகள் உட்பட ஆறு உணவகங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது வட்டிலப்பம் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர் ஒருவருக்கு colour code (உப்பு, இனிப்பு, கொழுப்பு) இடாமல் விற்பனை செய்தமை தொடர்பாக இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை குறித்த ஆறு உணவகங்களுக்கு மொத்தமாக ரூபா 65000 ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம். நௌசாத் தலைமையில் இடம்பெற்ற குறித்த செயற்பாட்டிற்கு வாகன உதவி செய்த சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே. முகம்மட், பிரதேச சபை வாகன சாரதி அனைவருக்கும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்