-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை கந்தன் வெளிக் கண்டத்தில், ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை காணப்பட்டது.
உயிரிழந்த நபர் கடந்த 03 நாட்களுக்கு முன் வயலுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என உறவினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இன்று காலை சம்மாந்துறை கந்தன் வெளிக் கண்டத்தில், ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலுக்கமைய உயிரிழந்தவரின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டது.
இவ்வாறு உயிரிழந்தவர் காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகவும் தபால் வீதி, குறுமன்வெளி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் சதீஸ்கரன் (41 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
