-யாழ் நிருபர்-
வவுனியா வடக்கு கனகராஜன்குளம், பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்திற்கு, சந்நிதியான் ஆச்சிரமத்தால் வீடு அமைத்து கொடுக்கப்பட்டது .
தங்கோடை காரைநகரை சேர்ந்த அமரர்களான கனகலிங்கம்- பத்மாவதி நினைவாக அவர்களின் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட ரூபா 1950000/- நிதியில் குறித்த வீடு இவ்வாறு அமைத்து கொடுக்கப்பட்டது.
அந்த வீடானது இன்று மதியம் சுப நேரத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், வீட்டுத்திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பாளர் ஆகியோரால் சம்பிர்தாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலமையிலான தொண்டர்கள், சமூக செயற்பாட்டாளர் இ.தயாபரன் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


