ஊவாபரணகம லத்தும பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் வெண் சந்தனம் கடத்திய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
லத்தும பிரதேசத்தில் நீண்ட காலமாக வெண் சந்தனம் கடத்தும் நபர் தொடர்பாக பொதுமக்களால் வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று ஞாயிற்று கிழமை பொலிஸ் குழுவினர் லத்தும பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்ததுடன் லொறி ஒன்றினையும் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது குறித்த சந்தேக நபர் வசமிருந்த 40 லட்சம் ரூபா பெறுமதியான வெண் சந்தன மரக் குற்றிகளை கைப்பற்றியதோடு சந்தன மரக் கடத்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அம்பகஸ்தோவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.