பொகவந்தலாவ பெற்றசோ தோட்ட பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றசோ தோட்டத்தை சேர்ந்த 25 முதல் 35 வயதுடைய ஐந்து இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் இன்று புதன் கிழமை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.