-பதுளை நிருபர்-
சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவா பெல்வத்தை சேனா மோட்டார்ஸ் ஹொரபொக்கவில் வசிக்கும் 49 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹிகுருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டார உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சந்தேகநபரை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதக்கான நடவடிக்கைகளை ஹிங்குறுகடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.