நானுஓயா ரதல்ல குறுக்குவீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் குறித்த வீதியில் சட்டவிரோதமாக கனரக வாகனங்கள் பயணிப்பதாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் குறித்த வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 7 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்தனர். இதனையடுத்து குறித்த வீதியால் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இரவு மற்றும் காலை வேளைகளில் குறித்த பாதையில் கனரக வாகனங்கள் பயணிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.