கம்பஹா கிரிபத்கொடையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானங்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, நாவலப்பிட்டி, கிரிபத்கொடை, போம்புவல, நாரம்மல மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 தொடக்கம் 47 வயதுக்கு இடைப்பட்டவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிபத்கொடை மாயா மாவத்தையில் அமைந்துள்ள குறித்த சட்ட விரோத மதுபானசாலை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன் போது 4000 மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்