முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் நேற்று புதன் கிழமை மாலை 5 மணியளவில் பதிவுகளின்றி சட்டவிரோதமாக இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குளாய் கிழக்கு பகுதியை சேர்ந்த 32 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் நாளையதினம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.