-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும், யாழ்ப்பாண பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரும் இணைந்து வெவ்வேறு இடங்களில் நடத்திய சுற்றிவளைப்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 117 கால் சாராய போத்தல்களும், 9 முழு சாராய போத்தல்களும் நிலத்தில் புதைக்கப்பட்டு, வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது கைப்பற்றப்பட்டது.
இவர்கள் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தபடுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.