தலைமன்னாருக்கு தெற்காகவுள்ள கடற்பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை சட்டவிரோதமாகக் கடற்றொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் இழுவை படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான மீனவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்களே இவ்வாறு கைதாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, கடந்த ஒரு வார காலப்பகுதியினுள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மொத்தமாக 57 இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்