கற்பிட்டி பகுதியில் நேற்று புதன் கிழமை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கடத்தி வரப்பட்ட 8.45 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி மண்டலகுடா பகுதியை சேர்ந்த 37 மற்றும் 42 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.