இந்தியாவில் கர்நாடகா மாநிலம் உடுப்பி டவுன் அம்பலவாடி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் 3 மாணவிகள் சேர்ந்து அதே கல்லூரியில் படிக்கும் மாணவி கழிப்பறையில் இருக்கும் போது தொலைபேசியில் மூலம் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களின் வாட்ஸாப் குழுவிற்கு அனுப்பிவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தை அறிந்த கல்லூரி நிர்வாகம் சம்மந்தப்பட்ட 3 மாணவிகளை உடனடியாக கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்தது, மேலும் மாணவியை வைத்து எடுக்கப்பட்ட ஆபாச வீடியோ இணையதளத்தில் கசிந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
இந்நிலையில், உடுப்பி மல்பே பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் குற்றத்தில் ஈடுபட்ட 3 மாணவிகளின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.