மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய வீதியைச்சேர்ந்த நபரொருவர் இன்று புதன் கிழமை காலை கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய வீதியைச்சேர்ந்த முஸம்மில் (வயது – 48) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
உயிரிழந்தவருடைய இளைய சகோதரனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கொலைக்கான காரணமென முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் சந்தேக நபரான இளைய சகோதரன் தலைமறைவாகியுள்ளார்.
சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் பணிப்பின் பேரில் பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தினேஷ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.