-பதுளை நிருபர்-
ஹப்புத்தளை லொக்கல்ல ஓயாவில் இன்று திங்கட்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் கரமட்டிய, ஹவன்கெட்டிய பிரதேசத்தில் உள்ள ஓடையில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.
வவ்பிட்டிய பிரகேசத்தின் கரமட்டிய பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தனது சகோதரனுடன் காணாமல் போன இளைஞன் லொக்கல்ல ஓயாவிற்கு மீன்பிடிக்கச் சென்ற போதே குறித்த இளைஞன் ஓடையில் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமற்போன இளைஞனை தேடும் நடவடிக்கையை பிரதேச மக்களுடன் இணைந்து கந்தகெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸ் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.