எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் 2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், 2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னதாக தெரிவித்திருந்தார்.