கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமான ஒன்று என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலை பாரியவில் அதிகரித்துள்ளதுடன் இந்த நிலைமை, அடுத்துவரும் வாரங்களுக்கு தொடரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அதிகரித்துள்ள கோழி இறைச்சியின் விலை அடுத்த சில வாரங்களில் குறையலாம் எனவும், குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படவில்லை எனவும் அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாததுடன், அது குறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.