கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும்

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்க கூடும், என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டையின் விலை 70 ரூபாய் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் என அச்சங்கம் தெரிவிக்கின்றது.

கடந்த சில மாதங்களாக கோழிகளுக்கான தீவனங்களை பெற்றுக்கொள்வதில் பண்ணையாளர்கள்பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதுவே இவ்வாறு கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை உயர்விற்கு காரணம் என இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தமது பண்ணைக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மாதந்தோறும் நாற்பது மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்திய கடன் எல்லை வசதியில், 20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விலங்கு தீவனங்களை இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.