இந்தியாவில் கோழி இறைச்சி உண்ட தந்தையும் மகளும் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், லாலா பேட்டை பகுதியை சேர்ந்த கௌதம் ஆனந்த் (வயது – 33) மற்றும் மகள் மிதுஸ்ரீ (வயது – 4) என்போரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கௌதம் திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டியில் கோழிப்பண்ணை நடத்தி வந்த நிலையில் கடந்த திங்கட் கிழமை மாலை, தந்தையும் மகளும் வீட்டில் சமைத்த, கோழி இறைச்சியை உண்ட பின்னர் அடுத்தடுத்து தந்தை மகள் இருவருமே வயிற்றுவலியால் துடித்தனர். உடனே திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு திங்கட்கிழமை இரவு மிதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துடன் திடீரென தந்தைக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார்.