அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பாரவூர்தி ஒன்றும் மகிழுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மகிழுந்தில் பயணித்த தம்பதியினரில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.
கெப்பிட்டிக்கொல்லாவை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 29 வயதுடைய மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய தம்பதியினருக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் விபத்தின் போது குழந்தை மகிழுந்தில் பயணிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பாரவூர்தியின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன் அவர் 64 வயதுடைய முன்னாள் இராணுவச் சிப்பாய் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.