கோதுமை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவிற்கான விலையை 13 ரூபாவினால் அதிகரித்துள்ளன.
சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி அறவிடப்பட்டமையை தொடர்ந்து இவ்விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கோதுமை மாவின் விலையை 250 ரூபாவினால் குறைக்கவுள்ளதாக நேற்று திங்கட்கிழமை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
அத்துடன், கோதுமை மா இறக்குமதியாளர்களிடம் டொலர்கள் இல்லாமை காரணமாகவே கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கோதுமையுடன் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாகவும், அவற்றை விடுவித்தால் கோதுமை மாவின் விலை குறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.