முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு வருவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதுவரை நாட்டிற்கு திரும்பவில்லை.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.