இரத்தினபுரியில் நேற்று புதன்கிழமை 43 கோடி ரூபாவிற்கு நீல நிற மாணிக்கக்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கஹவத்த கட்டாங்கே பிரதேசத்தில் உள்ள இரத்தினக்கல் சுரங்கத்தில் இருந்து இந்த மாணிக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணிக்கம் தொண்ணூற்றொன்பது கரட் எனவும் பெல்மடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.