-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிசாரால் ஒரு தொகுதி கஞ்சா அபின் என்பன இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 48 கிலோ அபினும் 28 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவின் வழிகாட்டலின் கீழ் வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் இடம் பெறும் கடற்கரையில் நீருக்கு அடியில் பதுக்கிவைத்திருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.