புத்தளம் கொழும்பு முகத் திடலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன் கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சடலம் கிடப்பதை கண்ட பொதுமக்கள் புத்தளம் தலைமையகப் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதோடு, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சடலம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.