கொழும்பு – மட்டக்குளி அலிவத்தையில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மட்டக்குளியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக , பொலிசார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பில் இரு கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.