கொழும்பு கொம்பனி வீதியில் உள்ள விமானப்படை தளம் பகுதியில் வீதியில் ஓடிக்கொண்டிருந்த நவீன தனியார் வாகனம் ஒன்று நேற்று திங்கட்கிழமை தீப்பற்றி எரிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தற்போது தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தீ பற்றியதற்கான காரணம் இது வரையிலும் அறியப்படவில்லை என்பதுடன் இது தொடரிபிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.