கொழும்பு வாழைத்தோட்டம் மார்ட்டிஸ் ஒழுங்கை பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டில் 22 வயது இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.