புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடத்திய சர்வதேச சகோதரிகள் தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் மிகச் சிறப்பாக நடை பெற்றது .
இதன்போது அமைப்பின் தலைவி ரஞ்சனி சுரேஷ் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
அமைப்பின் ஸ்தாபகர் ராதாமேத்தா சிறார் காப்பகங்களுக்கான உடை மற்றும் அத்தியாவசிய அவசிய பொருள்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தார்.
இவை மட்டக்குளியிலுள்ள மெளசேவன சிறுவர் இல்லம் மற்றும் வத்தளை கோகுலம் சிறுவர் நிலையம் என்பனவற்றுக்கு வழங்கப்பட்டன.
பிரதம நிர்வாகத்தின் தலைவர் ஷண்மு மற்றும் மகளிர் அணி செயலாளர் பிரியதர்ஷினி பாடசாலைகளுக்கான
நூல்கள் வழங்கினார்.
இவை இரத்தினபுரி நிரியெல்லை தமிழ் வித்தியாலயம் மற்றும் பசறை சைவ பிரகாசம் தமிழ் வித்தியாலயம் என்பனவற்றுக்கு வழங்கப்பட்டன.
திருமதி ஆனந்தி குறும்படக்கதை சொல்லும் நிகழ்வில் பங்கேற்று கதை சொன்னார்.
அத்துடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்ச்சியை மகளிர் அணியின் பொருளாளர் உஷா கெனடி தொகுத்து வழங்கினார்.







