-அலுவலக செய்தியாளர் சௌமினி சுததந்தராஜ்-
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பனிச்சயடி பகுதியை சேர்ந்ந 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்ததுடன் அவரது 15 வயது சகோதரி காயமடைந்துள்ளார்.
காரில் இரவு உணவு வாங்குவதற்காக சென்ற போதே எதிரி வந்த ஆளடியான் என்று சொல்லப்படும் கன ரக வாகனம் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நாளை அதிகாலை கொழும்பிலிருந்து பனிச்சயடிக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.