கொழும்பில் இன்று நீர் வெட்டு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்