கிளிநொச்சியில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு கணவன், மனைவி ஆகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியம்போக்கணை பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் மூன்று கொள்ளையர்கள் வீடொன்றினுள் புகுந்து வீட்டிலிருந்தவர்களை தாக்கியுள்ளனர்.
இதன்போது, வீட்டில் இருந்த கணவன் மனைவி ஆகியோர் மீது, கத்தியால் கை பகுதியில் வெட்டியும், உலக்கையால் தாக்கியும் காயப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், வீட்டிலிருந்த பல பொருட்களை சேதப்படுத்திவிட்டு, கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந் நிலையில், வீட்டிளிருந்த சிறுவர்களின் சத்தம் கேட்டு அயலவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபொழுது, வீட்டிலிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் இருப்பதை அவதானித்து இருவரையும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இச்சம்பவத்தில், கொள்ளையிடப்பட்ட பொருட்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.
கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளi முன்னெடுத்துள்ளனர்.

