கொத்துரொட்டியை உண்டு விட்டு உறங்கச் சென்ற பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று ஹொரணை – வல்பிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.
33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த பெண் சில காலமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் கொத்துரொட்டியை உண்டதன் காரணமாகவா அவர் உயிரிழந்தார் என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.