மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை காலை கடனை மீள பெற வந்த இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலகல, கிரிவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை செய்யப்பட்ட நபர் நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவருக்கு கடன் வழங்கியுள்ளதாகவும் இவர் கடன் தொகையை வசூலிப்பதற்காக மற்றொரு நபருடன் முச்சக்கர வண்டியில் கடனாளியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இருவரும் வந்து கடனாளியின் வீட்டின் மூடியிருந்த கேற்றை திறக்க முற்பட்டதுடன்இ அப்போது கடன் வாங்கிய வீட்டின் உரிமையாளர் கூரிய ஆயுதம் ஒன்றை கொண்டு வந்து இருவரையும் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.பின்னர் காயமடைந்த இருவரும் தாங்கள் வந்த அதே முச்சக்கரவண்டியில் ஹோமாகம வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை பெற்றுக் கொள்ள உயிரிழந்தவர் வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையை செய்த சந்தேக நபர் ஹோகந்தர பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.