அநுராதபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை பொறியியலாளர் தனது முகநூலில் புகைப்படம் பதிவிட்டு விட்டு தன் உயிரை மாய்த்துள்ளார்.
கலென்பிந்துனுவெவஇ கோமரன்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய பொறியியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தன் உயிரை மாய்ப்பதற்கு முன்னதாக தனது முகநூல் பக்கத்தில் வெள்ளைக் கொடி ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டதையடுத்து சந்தேகத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பக்கத்தில் உள்ள அறையொன்றில் உயிரை மாய்த்துகொண்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த நபர் உயிரை மாய்த்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கலென்பிந்துனுவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.