ஜா-எல பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் தப்பிச்செல்ல ஆற்றில் குதித்த போது அவரை பிடிக்க ஆற்றில் குதித்த பொலிஸ் கான்ஸ்டபிள் காணாமல் போயுள்ளார்.
ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 26 வயதுடைய சாவகச்சேரியைச் சேர்ந்தவரே இவ்வாறு காணமல் போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ஜா-எல பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் ஹெரோயின் போதைப்பொருள் சம்பவம் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று பொலிஸ் கெப் வண்டிக்கு அழைத்து வந்துள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர் கைவிலங்குடன் அருகில் உள்ள ஆற்றில் குதித்து தப்பி ஓட முயன்றபோது, அவரை கைது செய்ய மூவருடனான பொலிஸ் அதிகாரிகள் குழுவும் ஆற்றில் குதித்துள்ளனர்.
அங்கு குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.