-யாழ் நிருபர்-
இளவாலை பகுதியில், கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் ஞாயிற்று கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இளவாலை பகுதியில் உள்ள விடு ஒன்றினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என சந்தேகித்து, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக இளவாலை பொலிஸார் இன்றையதினம் அவரது வீட்டிற்கு சென்றனர்.
இதன்போது அவரது வீட்டில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.