வவுனியா, தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் எனவும் சடலம் அடையாளம் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் அழுகிய நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.