ஊராபொல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஒன்பது மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலைக்கு கேக் கொண்டு வரப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டதன் பின்னர் அதனை உண்ட மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வட்டுபிட்டியல பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேக்கினால் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதாக என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.